சிவகங்கை அருகே பயங்கர விபத்து
சிவகங்கை அருகே பயங்கர விபத்து ஏற்பட்ட நிலையில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்;
சிவகங்கை மாவட்டம், செம்பூர் காலனி அருகே இன்று பயங்கர வாகன விபத்து ஏற்பட்டது. டீசல் மற்றும் எரிவாயு ஏற்றி வந்த இரண்டு லாரிகளும், அரசு பேருந்தும் மோதி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிவகங்கை நோக்கி சென்ற டீசல் லாரி, முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது, எதிரே மதுரை நோக்கி வந்த அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியது. அதே நேரத்தில் பின்னால் வந்த எரிவாயு லாரியும் பேருந்தில் மோதியதில், அந்த மூன்று வாகனங்களும் பலத்த சேதமடைந்து சாலையோர பள்ளத்தில் சிக்கி நின்றன. விபத்தில் டீசல் லாரி டிரைவர் நந்தகுமார் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். திருப்புவனம், பூவந்தி மற்றும் சிவகங்கை பகுதிகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்தனர். இதில் தீவிபத்து ஏற்படாமல் இருக்க தீயணைப்பு துறையினர் உடனடியாக சீர்செய்தனர்.