சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சிறை தண்டனை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு;

Update: 2025-04-22 13:03 GMT
காரைக்குடியை அடுத்துள்ள பாப்பாஊரணி தெற்கு பகுதியை சேர்ந்த 73 வயது முதியவர் முத்து முனியாண்டி. இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது சம்பந்தமாக காரைக்குடி அனைத்து மகளீர் காவல்துறையினர் இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை விசாரனை செய்த சிவகங்கை ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன், முத்து முனியாண்டிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டு அதிரடி தீர்ப்பை வழங்கினார்.

Similar News