எஸ்ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்
சிவகங்கையில் எஸ்ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம் - ஆட்சியர் தகவல்;
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கு மொத்தம் 1,299 காலிப்பணியிடங்கள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வருகின்ற 25.04.2025- முதல் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான கல்வித்தகுதி ஏதாவது இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். வயது வரம்பு 01.07.2025 அன்றைய தேதியில் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு-30. BC/MBC -32, SC/ST-35, ஆதரவற்ற விதவை வயது 37 ஆகும். இத்தேர்விற்கு வருகின்ற 03.05.2025 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்யவதற்கும், தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கும் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி விவபரங்கள் பெறலாம். எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான வேலைநாடுநர்கள் மேற்காணும் தேர்விற்கு இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பம் செய்து, இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். மேலும், இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் 04575-240435 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது நேரிலோ வருகை புரிந்து தங்களது பெயரைப் பதிவுசெய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்