அரக்கோணம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இன்று அரக்கோணம் பழனி பேட்டை அங்காளம்மன் கோயில் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது போதை மாத்திரை விற்பனை செய்த சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சஞ்சய், ஸ்ரீதர், சந்திரசேகர், சரண்குமார், அருண் பிரகாஷ் 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1679 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர் இவற்றின் மதிப்பு ரூபாய் 69 ஆயிரம் ஆகும்.