அரசு பஸ் - லாறி நேருக்கு நேர் மோதல்

பூதப்பாண்டி;

Update: 2025-04-23 03:07 GMT
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள கடுக் கரையிலிருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றி கொண்டு நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டு இருந்தது. குறத்தியறை விலக்கு திருப்பத்தில் அரசு பேருந்து நாகர்கோவிலுக்கு வருவதற்க்காக திரும்பும்போது, எதிரே வந்த லாறி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் அரசு பஸ்சில் பயணம் செய்த பயணிகள் காயம் எதுவும் ஏற்படாமல் தப்பினார். ஆனால் இரு வாகனங்களின் முன்புறமும் பலத்த சேதமடைந்தது. இது குறித்து இருவரும் பூதப்பாண்டி காவல் நிலையததில் புகார் தெரிவித்தனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News