மயிலாடி பேரூராட்சியில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கன்னியாகுமரி;

Update: 2025-04-23 03:30 GMT
குமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சி கூட்டம் செயல் அலுவலர் அம்புரோஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் புதிய பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக சுமார் 9 கோடிக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை மயிலாடி பாஜக தலைவி தனது வார்டுக்கும், தனது கணவர் வார்டுக்கும் தேவையற்ற பணிகளை செய்து தமிழக அரசின் நிதியை வீணடித்ததாகவும், தொடர்ந்து திமுக கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணிப்பு செய்வதாகவும் கூறி திமுக கவுன்சிலர் அன்ன சுமதி முன்னிலையில் மயிலாடி பேரூராட்சி துணை தலைவர் சாய்ராம் தலைமையில் ஜெயலட்சுமி, சிவசங்கர் (எ) கண்ணன், குளோரி, சகாயமேரி, பிரின்ஸி பாக்கிய பாய் என சுமார் எழு கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் நேரில் வந்து விசாரனை செய்து விளக்கம் தந்தால் தான் கலைந்து செல்வோம் என கோஷமிட்டனர். இந்நிலையில் சம்பவ இடம் நேரில் வந்த பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய திமுக கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இனி அனைத்து வார்டுகளுக்கும் நிதி ஒதுக்கி பணிகள் விரைந்து நடைபெறும் எனவும் உறுதி அளித்தார்.

Similar News