மடைகாட்டுப்புதூர் அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. வடமாநில தொழிலாளி உயிரிழப்பு.
மடைகாட்டுப்புதூர் அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. வடமாநில தொழிலாளி உயிரிழப்பு.;
மடைகாட்டுப்புதூர் அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. வடமாநில தொழிலாளி உயிரிழப்பு. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஹரேஸ்வர்சிங் மரப்பாச்சி வயது 21. இவர் தென்னிலை அருகே வெள்ளியம்பாளையத்தில் செயல்படும் செல்வக்குமார் கிரஷர் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இதே போல சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அரவான் போபோ வயது 24 என்பவர் ** வைரமடை அருகில் உள்ள குறிஞ்சி கிரஷர் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் ஏப்ரல் 21 ஆம் தேதி காலை 9 மணி அளவில் தென்னிலை - சின்னதாதாராபுரம் சாலையில் அவர்களது டூவீலரில் சென்றனர். டூவீலரை ஹரேஸ்வர்சிங் மரப்பாச்சி ஓட்டிச் சென்றார். இவர்களது வாகனம் மடைக்காட்டுபுதூர் கருப்பசாமி கோவில் வளைவு அருகே வந்தபோது, எதிர் திசையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, சன்னதி தெருவை சேர்ந்த சுபதாசன் வயது 35 என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம் ஹரேஸ்வர்சிங் மரப்பாச்சி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஹரேஸ்வர்சிங் மரப்பாச்சி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடன் வந்த ஹர்பான் போபோ பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த இவர்களது உறவினர் லட்சுமிகாந்த் வயது 32 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ஹரேஸ்வர்சிங் மரப்பாச்சி உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக சரக்கு வாகனத்தை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுபதாசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல் துறையினர்.