கொடைக்கானல் அரசு மைதானத்தில் விழிப்புணர்வு கால்பந்து போட்டி
போதை முடிவல்ல, தற்கொலை தீர்வல்ல என்ற தலைப்பில் கொடைக்கானல் அரசு மைதானத்தில் விழிப்புணர்வு கால்பந்து போட்டி நடைபெற்றது;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு மைதானத்தில் Kingdom youth kodai மற்றும் K.F.W.A நண்பர்கள் சார்பாக கொடைக்கானல் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளான மேல்மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் வசித்து வரும் இளைஞர்களுக்கு போதைப் பொருட்கள் மற்றும் தற்கொலை முயற்சி தவறுகளில் ஈடுபடக் கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் கால்பந்து போட்டியில் 30க்கும் மேற்பட்ட குழுக்கள் 364 கால்பந்து வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர் இதில் வீரர்கள் மத்தியில் நியூ லைஃப் ஸ்போர்ட்ஸ்(new life sports) சார்பாக போதை முடிவல்ல, தற்கொலை தீர்வல்ல என்ற தலைப்பில் விழிப்புணர்வு சிறப்புரையாற்றப்பட்டது மேலும் கால்பந்து போட்டி தொடர்ந்து மூன்று நாட்கள் சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆட்டநாயகன் விருதுகள் கோப்பை வழங்கப்பட்டது, கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும், பதக்கங்களும், முதல் பரிசு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் இரண்டாம் பரிசு 10 ஆயிரம் வழங்கப்பட்டது