திருக்கோஷ்டியூரில் ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்
திருக்கோஷ்டியூரில் ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு;
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் பகுதியில் எம்.புதூரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சுடர்மணி என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த ஞானசேகரன் மற்றும் தனசேகரன் ஆகிய இருவரும் மது போதையில் சென்று தொழிலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தட்டிகேட்ட சுடர்மணியை கம்பியால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்