திருப்பாச்சேத்தி அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
திருப்பாச்சேத்தி அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது;
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் வெங்கடேசன். இவர் மழவராயனேந்தல் விளக்கு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த சிவசிங்கம் மகன் லட்சுமணன் (வயது 35) அவரிடம் கத்தியை கட்டி மிரட்டி ரூபாய் 500 பணத்தை பறித்து சென்றதாக கூறப்படும் நிலையில் திருப்பாச்சேத்தி போலீசார் லட்சுமணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்