நலவாரியங்கள் மூலம் ஓய்வூதியம் பெற்று வந்த வயதான ஓய்வூதியர்களுக்கு இ.பி.எப் காரணம் காட்டி நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை உடனே வழங்க கேட்டும், நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை மாதம் ரூ 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க கேட்டும், அனைத்து நலவாரிய ஓய்வூதியர்களுக்கும் மாதந்தோறும் முறையாக பாரபட்சமின்றி ஓய்வூதியம் வழங்க கேட்டும், கலைஞர் கைவினைத் திட்டத்தில் விண்ணப்பித்த தொழிலாளர்களுக்கு தாமதமின்றி கடன் உதவி வழங்க கேட்டும், வீடு கட்ட மானியம் கேட்டு விண்ணப்பித்த கட்டுமான தொழிலாளர்களுக்கு உடனே மானியத் தொகை அனுமதிக்க கேட்டும் தோட்டத்து தொழிலாளர்களுக்கு தனிநலவாரியம் ஏற்படுத்த கேட்கும் உட்பட பல்வேறு அம்ச 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிள்ளியூர் தாலுகா அலுவலகம் முன்பு ஒன்றிய தலைவர் விஜயகோபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மத்திய நகை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் மகேஷ் ,பாரதீய அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் ஜெயபாலன், திட்டச் செயலாளர் அருண்குமார், கட்டுமான சங்க பொருளாளர் தேவதாஸ், பாரதிய டாஸ்மார்க் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பால்குமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினார். 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்