போப் பிரான்சிஸ் நினைவு ஊர்வலம், திருப்பலி

குழித்துறை;

Update: 2025-04-24 12:02 GMT
கன்னியாகுமரி, குழித்துறை மறை மாவட்டம் சார்பில் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி அவரது நினைவாக திருப்பலி மற்றும் இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது. இரங்கல் ஊர்வலத்திற்கு குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ் தலைமை வகித்தார். திருத்துவ புரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் இருந்து துவங்கிய நினைவு இரங்கல் பேரணியில் குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் சேவியர் பெனடிக்ட், தலைமை  செயலாளர் அந்தோணி முத்து, நிதி காப்பாளர் ஜெயக்குமார் மற்றும் மறைவட்ட முதல்வர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.        தொடர்ந்து திருத்துவபுரம் மூவரு இறைவன் பேராலயத்தில் இரங்கல் பேரணி வந்தடைந்ததும் ஆயர் தலைமையில் இரங்கல் திருப்பலி நடைபெற்றது. இதில் அருட்பணியாளர்கள், அருள் சகோதரிகள், குழித்துறை மறை மாவட்ட இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News