44 வது தேசிய அளவிலான தடகள போட்டியானது கடந்த 21.04.2025 ம் தேதி முதல் 23.04.2025 வரை கர்நாடகா மாநிலம், மைசூர் சாமுண்டி விஹார் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் திலீபன் உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசும், நீளம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் பரிசும், ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றார். மேலும் கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் தலைமை காவலர் டேவிட் ஜாண் 5000 மீட்டர் தடகள போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்-னை சந்தித்தனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று குமரி மாவட்ட காவல்துறைக்கு பெருமை தேடித்தந்த உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை அவர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.