மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

அட்டை;

Update: 2025-04-25 04:19 GMT
கள்ளக்குறிச்சியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில், 86 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் தினேஷ், காது, மூக்கு, தொண்டை டாக்டர் வாசவி, மனநல டாக்டர் உஷாநந்தினி, கண் டாக்டர் காயத்ரி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்துகொண்ட, 102 மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். அதில் தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் 86 பேருக்கு, தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

Similar News