சோளிங்கர் அருகே மது போதையில் குளத்தில் குளித்தவர் பலி

மது போதையில் குளத்தில் குளித்தவர் பலி;

Update: 2025-04-25 04:19 GMT
சோளிங்கர் அடுத்த கீழ் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன் (47). இவர், நேற்று சோளிங்கரில் உள்ள தனது மருமகன் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில், குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த சோளிங்கர் தீயணைப்பு துறையினர், வரதனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து ஆர்கே பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

Similar News