வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி உள்ளது. தேர்திருவிழா மே.9.ல் நடைபெறவுள்ளது. நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் தினமும் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கோயில் எதிரே தேர் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பகுதியில் கழிவு நீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படும் சூழ்நிலை காணப்படுகின்றது. இதற்கு நடவடிக்கை தேவை.