மதுரையில் பிரதோஷ வழிபாடு
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.;
மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் இன்று (பிப்.25) வெள்ளிக்கிழமை மாலை சுக்ர வார பிரதோசத்தை முன்னிட்டு ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதங்கள் வழங்கப்பட்டன.