தர்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள தருமபுரீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு. பிரதோஷ நாயனார் எழுந்தருள செய்யப்பட்டு நந்தியபெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளை திரரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்;

Update: 2025-04-25 18:25 GMT
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள தருமபுரீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு நந்திக்கு பால் பழம் பன்னீர் சந்தனம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பிரதோஷ நாயனார் எழுந்தருளசெய்யப்பட்டு பக்தர்கள் மற்றும் தருமபுரம் பாடசாலை மாணவர்களால் பாராயணம் பாடப்பட்டு மந்திரங்கள் ஓதப்பட்டது. பின்னர் நந்தியபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்திக்கு அர்ச்சனை செய்து பிரதோஷ வழிபாட்டை கண்டு தரிசனம் செய்தனர்.

Similar News