உபயோகித்த எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி கோழிக்கறி பொறித்து விற்பனை

3 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம்;

Update: 2025-04-26 07:14 GMT
நாகை வெளிப்பாளையம் பகுதியில் செயல்படும், 4 கோழிக்கறி விற்பனை செய்யும் கடைகளில், உபயோகித்த எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி கோழிக்கறி பொறித்து விற்பனை செய்யப்படுவதாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வரப்பட்ட புகாரையடுத்து, நாகை உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின்படி, நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன் புகாருக்கு உள்ளான கடைகளில் சமைக்கப்படும் எண்ணெயை ஆய்வு செய்ய பயன்படும் கருவியைக் கொண்டு ஆய்வு செய்தார். அனைத்து கடை உரிமையாளர்களும், உணவு பாதுகாப்புத்துறை உரிமம் 3 கடைகளில் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, ஒரு கடையில் உபயோகித்த எண்ணெய் ஒன்றரை லிட்டரும், மற்ற இரு கடைகளில் தலா ஐந்து லிட்டர்களும் கைப்பற்றப்பட்டு குப்பையில் கொட்டி அழிக்கப்பட்டது. 3 கடைகளுக்கும் தலா ரூ.ஆயிரம் அபராதம் விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கடை உரிமையாளரிடம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன் கூறியதாவது இனி வரும் காலங்களில் உபயோகித்த எண்ணெயை மீண்டும் மீண்டும் உபயோகிக்கக் கூடாது. மீறினால் உணவு மாதிரி எடுத்து அனுப்பப்பட்டு, முடிவுகளின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவர் அவர் கூறினார்.

Similar News