சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மரம் நடுவிழா
தேவகோட்டையில் மரம் நடும் விழா - நீதிபதிகள் பங்கேற்பு;
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தேவகோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சார்பு நீதிமன்ற வளாகத்தில் Mega Tree Plantation மாபெரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சார்பு நீதிபதி கலைநிலா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/சார்பு நீதிபதி ராதிகா, நீதித்துறை நடுவர் மாரிமுத்து மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரேமி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை வழக்கறிஞர்கள் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் எழுத்தர்கள், நீதிமன்ற அலுவலர்கள், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர். அனைவரும் தனி கவனம் செலுத்தி மரக்கன்றுகளைப் பாதுகாத்து வளர்க்க முன்வர வேண்டுமென தேவகோட்டை சார்பு நீதிபதி கலைநிலா தெரிவித்தார்.