சிங்கம்புணரியில் சாலை மறியலில் ஈடுபட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர்
சிங்கம்புணரியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு;
சிங்கம்புணரி நான்கு முனை சந்திப்பில் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டமும், அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெற இருப்பதாக விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் பதாகை வைக்கப்பட்டது. இதை போலீஸாா் அப்புறப்படுத்தியதால் ஆா்.எஸ்.எஸ். தொண்டா்களும், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.