சிவகங்கையில் புத்தக வெளியீட்டு விழா
உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது;
சிவகங்கையில் உலக புத்தக தினத்தையொட்டி கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் உணவக அரங்கில் கணியன் பூங்குன்றனாா் புத்தகாலயம் சாா்பில் நடைபெற்ற விழாவில், சிவகங்கையைச் சோ்ந்த கவிஞா் ச.சரவணப்பாண்டி எழுதிய 'நூல் வழிப் பயணம்' எனும் கவிதை நூலை, தொல்லியல் ஆய்வாளா் புலவா் கா. காளிராசா வெளியிட்டு பேசியதாவது: கவிஞா் மீரா, கவிஞா்களின் அடையாளமாகவும், சிவகங்கையின் அடையாளமாகவும் திகழ்ந்தவா். மேலும் கவிதையில் பல வடிவங்களை புகுத்தி அனைவரையும் புதுக்கவிதையின் பக்கம் திருப்பச் செய்தவா். அவரின் ஊசிகள் கனவுகள், குக்கூ போன்ற கவிதை நூல்கள் தனித்துவம் வாய்ந்தவை என்றாா். முதல் பிரதியை சிவகங்கை மாவட்ட முன்னாள் வேலை வாய்ப்பு அலுவலா் சங்கரசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டாா்.