வேப்பனப்பள்ளியில் பூச்சி மேலாண்மை குறித்த விவசாயிகளுக்கு பயிற்சி.

வேப்பனப்பள்ளியில் பூச்சி மேலாண்மை குறித்த விவசாயிகளுக்கு பயிற்சி.;

Update: 2025-04-26 08:22 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாரசந்திரம் பகுதி விவசாயிகளுக்கு பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியினை வேளாண்மை உதவி இயக்குநர் சிவநதி தொடங்கி வைத்து பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி கூறினார். இதில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விவரம் மற்றும் இடுப்பொருள் வழங்கப்பட்டது.

Similar News