ஊத்தங்கரை அருகே தேமுதிக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்.

ஊத்தங்கரை அருகே தேமுதிக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்.;

Update: 2025-04-26 12:42 GMT
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் பல்வேறு இடங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் ஊராட்சியில் தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் சின்னராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார். இதனை அடுத்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை ஆன்லைனில் பதிவு செய்து பின்னர் அங்குள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் திரளான நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Similar News