காவலரின் மகனை பாராட்டிய காவல் ஆணையர்
சென்னையில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் வெற்றி பெற்ற மாணவரை காவல் ஆணையர் பாராட்டினார்.;
மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில், காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற, காவலர் பூலாடி என்பரின் மகன் செல்வன்.பிரதீப் குமார் என்பவர், சென்னை ஆவடியில் நடைபெற்ற கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் வென்ற மாணவரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார்