மாநகராட்சி வழக்கம் போல் நாளை வரி வசூல் மையம் செயல்படும்.

தூத்துக்குடி மாநகராட்சி ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் வரி வசூல் மையம் செயல்படும் ஆணையர் தகவல்;

Update: 2025-04-26 13:24 GMT
தூத்துக்குடி மாநகராட்சி ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் வரி வசூல் மையம் செயல்படும் ஆணையர் தகவல் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2025 - 26ம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி ஐந்து சதவீதம் தள்ளுபடியினை பெற்று பயன்பெறுவதற்கு ஏதுவாக 27.04.2025 ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் அனைத்து வரிவசூல் மையங்களும் செயல்படும் என மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்தார்.

Similar News