அரக்கோணத்தில் தமிழில் பெயர் பலகை வைக்க கூட்டம்
தமிழில் பெயர் பலகை வைக்க கூட்டம்;
அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் துரை செந்தில்குமார் தலைமையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மே 15ஆம் தேதிக்குள் அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட கடை மற்றும் உணவகங்களில் தமிழில் பெயர் வைக்க வேண்டும் இல்லாவிடில் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.