ராணிப்பேட்டை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி!

குளத்தில் மூழ்கி 8ஆம் வகுப்பு மாணவன் பலி;

Update: 2025-04-26 16:05 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ஆயர்பாடி கிராமத்தில் உள்ள குளத்தில் சிறுவன் ஒருவன் இன்று இறந்து கிடப்பதாக அவளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அங்குள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கண்ணன் பள்ளி விடுமுறை நாளில் குளத்தில் குளக்க சென்றபோது தவறி விழுந்து இறந்தது தெரிந்தது.

Similar News