கல்லாவி அருகே வி.ஏ.ஒ. வை மிரட்டல்-கணவன்-மனைவி கைது.

கல்லாவி அருகே வி.ஏ.ஒ. வை மிரட்டல்-கணவன்-மனைவி கைது.;

Update: 2025-04-27 00:44 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் கல்லாவி அடுத்த பெரியகொட்டகுளம் வி.ஏ.ஒ. கிராம நிர்வாக அலுவலர் இளம்பருதி (43) இவர் நேற்று முன்தினம் சோலையூர் பகுதியில் ஒரு நிலம் அளப்பதற்காக சென்றார். அப்போது இதே பகுதியை சேர்ந்த வேடியப்பன் (48) அவரது மனைவி சக்தி (43) ஆகியோர் எங்கள் நிலத்தில் நீங்கள் எப்படி அளக்கலாம் எனக்கூறி வி.ஏ.ஒ.விடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கல்லாவி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்த வேடியப்பன் அவரது மனைவி சக்தி ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

Similar News