கிருஷ்ணகிரி: குட்கா, மதுபாட்டில்கள் கடத்திய டிரைவர் கைது.
கிருஷ்ணகிரி: குட்கா, மதுபாட்டில்கள் கடத்திய டிரைவர் கைது.;
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கிருஷ்ணகிரி ஆஞ்சநேயர் கோயில் மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் கன்டெய்னருக்குள் ரகசிய அறை அமைத்து அதில் 530 கிலோ குட்கா மற்றும் கர்நாடக மதுபாட்டில்கள் கடத்தியது கண்டு பிடிக்கபட்டது. இது தொடர்பாக போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம், தும்கூர் அடுத்த படாகானஅள்ளி பகுதியை சேர்ந்த மோகன்மூர்த்தி (37) என்பதும் கர்நாடகாவில் இருந்து குட்கா மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து மேலும் குட்கா, மதுபாட்டில்கள், லாரியை போலீசார் பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.