தாக்குதலில் உயிழந்தவர்களுக்கு செவிலியர் கல்லூரி சார்பில் அஞ்சலி
பஹல்காம் தாக்குதலில் உயிழந்தவர்களுக்கு செவிலியர் கல்லூரி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி இதயஅஞ்சலி செலுத்திய மாணவ மாணவிகள்;
இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்திற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் மரணம் அடைந்த 28 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தருமபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் செவிலியர் கல்லூரி சார்பில் நேற்று மாணவ மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்தியர்கள் அனைவரும் எனது சகோத சகோதரிகள், எனது நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன் உன உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட செவிலியர் தலைவி ராஜேஸ்வரி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் மகேஸ்வரி ரஞ்சிதா,குமுதா,அம்ரின் பானு முனைவர் பொன்னம்பலம் கல்லூரி துணைப் பேராசிரியர் சந்தியா மக்கள் தொடர்பு அலுவலர் லாவண்யா கல்லூரி நிர்வாக அலுவலர் ஜோதிபாசு, பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என ஏராளமனோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.