சூளகிரி: உயர் மின் அழுத்தம்-வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்.

சூளகிரி: உயர் மின் அழுத்தம்-வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்.;

Update: 2025-04-27 01:31 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பீரேபாளையம் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை அந்த டிரான்ஸ்பார்மரில் திடீரென உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள 30-க்கும் மேற் பட்ட வீடுகளில் இருந்த மின் மீட்டர்கள், டி.வி.க்கள், பேன், பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமானது. இதன் காரணமாக அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Similar News