வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் புதிய தலைவர் தேர்வு

மதுரை திருமங்கலம் வழக்கறிஞர் சங்க தேர்தலில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.;

Update: 2025-04-27 02:08 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தில், கடந்த 10 ஆண்டுகளாக ராமசாமி என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (ஏப் 26) நடைபெற்ற சங்க தேர்தலில், 191 வழக்கறிஞர்கள் இச்சங்கத்தில் உள்ள நிலையில், ராமசாமியை எதிர்த்து நின்று சஞ்சய் காந்தி என்பவர் 9 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வழக்கறிஞர் சங்க தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். ராமசாமி பெற்ற வாக்குகள் 91, சஞ்சய் காந்தி பெற்ற வாக்குகள் 100. அதனைத் தொடர்ந்து செயலாளராக திலீப் குமார் என்பவர் அறிவொளி என்பவரை விட 40 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் . மேலும் துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கும், புதியவர்களே தேர்வு செய்யப்பட்டனர்.

Similar News