வாகன விபத்தில் கூரியர் வேன் டிரைவர் பலி.
மதுரை திருமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் கூரியர் வேன் டிரைவர் பலியானார்.;
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கூரியர் கம்பெனியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்த ராமலிங்கம் (44) என்பவர் நேற்று முன்தினம் (ஏப்.25) இரவு ஈரோட்டிற்கு வேனை ஓட்டிச் சென்றார். அவருடன் உதவியாளர் அன்சாரியும் சென்றார். நேற்று (ஏப் .26) அதிகாலை கள்ளிக்குடி அருகே டூவீலரில் வந்த ஒருவர் ரோட்டின் தடுப்பில் மோதி விழுந்த போது அப்போது அந்த வழியாக கொடைக்கானல் சென்ற அரசு பேருந்து பிரேக் அடித்த போது கூரியர் வேன் பின்பகுதியில் பேருந்து மோதியதில் ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். அன்சாரி காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.