பாஸ்க்கு திருவிழா சிறப்பு திருப்பலி வழிபாடு

கோவிலூரில் பாஸ்கு பெருவிழா, சிறப்பு திருப்பலி வழிபாடு.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு;

Update: 2025-04-27 05:11 GMT
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி வட்டம் கோவிலூரில் சுமார் 345 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு தற்போது 177 வது பாஸ்க்கு  பெருவிழா குழந்தை ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி கோலாலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று பாஸ்கு திருவிழா திருப்பலி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பைஸ் தலைமையில் ஏப்ரல் 27 இன்று காலை 6:30 அளவில் தொடங்கியது. பங்குத்தந்தை ஆரோக்கியசாமி முன்னிலையில் ஏராளமான பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டனர் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திருப்பலியில் பங்கு கொண்ட பங்கேற்றனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் வேண்டுதல் அசைவ உணவு வழங்கப்பட்டது.

Similar News