சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்.
மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.;
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஏப் .27) காலை சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ,அமைச்சர்கள் மூர்த்தி பழனிவேல் தியாகராஜன் மதுரை எம்பி வெங்கடேசன், காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட எஸ்.பி, மேயர் , மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அனைத்து துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சித்திரைத் திருவிழா எந்தவித பாதிப்பும் இல்லாமல் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் நடைபெறுவதை குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.