சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து

சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து;

Update: 2025-04-27 07:46 GMT
சென்னை, பள்ளிக்கரணை, ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 38. இவர், நேற்று காலை தன் மனைவி சித்ரா,35, என்பவருடன், மாருதி சுசூகி காரில், திருவண்ணாமலை நோக்கி ஜி.எஸ்.டி., சாலையில் சென்று கொண்டிருந்தார்.செங்கல்பட்டு, பரனுார் சுங்கச்சாவடி அடுத்த புலிப்பாக்கம் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி, தலைகீழாக கவிழ்ந்தது. இதில், தம்பதி காயங்களுடன் உயிர் தப்பினர். அங்கிருந்தோர் இவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக, ஜி.எஸ்.டி., சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News