மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அறக்கட்டளையினர்.

மதுரை தெற்கு வாசலில் மாற்றுத் திறனாளிகளுக்கு பலசரக்கு தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.;

Update: 2025-04-27 09:30 GMT
மதுரை தெற்கு வாசல் காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் இன்று (ஏப்.27) மதியம் 1.30 மணியளவில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு முனீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன . பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சுமார் 20 கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பலசரக்கு தொகுப்பு அடங்கிய பை மற்றும் மதிய உணவு ஆகியன ஸ்ரீ முனீஸ்வரர் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டது.

Similar News