மேலூரில் வடமாடு மஞ்சுவிரட்டு

மதுரை மேலூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.;

Update: 2025-04-27 11:27 GMT
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், வினோபா காலனி ஸ்ரீ முத்துக்காளியம்மன் உற்சவ விழா மற்றும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்களின் பிறந்தநாள் மற்றும் கட்சி அங்கீகார வெற்றி விழாவை முன்னிட்டு செவன் பேந்தர்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்திய முதலாம் ஆண்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வினோபா காலனியில் இன்று (ஏப். 27) நடைபெற்றது. இந்த போட்டியில் 15 அணியை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தம் 15 காளைகள் கலந்து கொண்டன. போட்டியில் பங்கேற்ற அனைத்து காளையின் உரிமையாளர்களுக்கு வெள்ளிகாசு, பீரோல், அண்டா, குத்து விளக்கு, தென்னங்கன்று, கட்டில், ரொக்க பரிசு தொகை வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கு வெள்ளிகாசு, பீரோல், அண்டா, குத்து விளக்கு, தென்னங்கன்று, கட்டில், ரொக்க பரிசுதொகையினை விழா குழுவினரால் வழங்கப்பட்டது. இந்த போட்டியை காண சுற்றுப்புற கிராமங்களான எட்டிமங்கலம், ஜோதிநகர், சென்னகரம்பட்டி, நொண்டிக்கோவில்பட்டி, நாவினிபட்டி, கீழையூர், சூவாஞ்சான்பட்டி, புதுச்சுக்காம்பட்டி, தும்பைபட்டி, மேலவளவு, கல்லம்பட்டி, சூரக்குண்டு, மேலூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் வட மஞ்சுவிரட்டு போட்டியை கண்டு களித்தனர்.மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை வினோபா காலனி பொதுமக்கள், இளைஞர்கள்,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், விழா குழுவினர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Similar News