கஞ்சா விற்பனை செய்த வடமாநில வாலிபர் கைது
ஈரோட்டில் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்த வட மாநில வாலிபர் கைது;
ஈரோடு வெண்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சாவை பொட்டலங்கள் மூலம் விற்பனை செய்து வருவதாக மொடக்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மொடக்குறிச்சி போலீசார் வெண்டிபாளையம் தமிழ்நகர் அருகே வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வந்ததது தெரிய வந்தது.மேலும் அவரிடம் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த நபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த லாபா கர்மி என்பதும் அவர் விற்பனைக்காக அடிக்கடி ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த மொடக்குறிச்சி போலீசார் அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.