கள்ள நோட்டு விவாகரத்தில் மேலும் ஒருவர் கைது

சிவகிரியில் உள்ள ஏ.டி.எம் எந்திரத்தில் கள்ள நோட்டு இருந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது;

Update: 2025-04-27 13:24 GMT
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் எந்திரத்தில் கள்ள நோட்டு இருப்பதாக வங்கி கிளை மேலாளர் குட்டி கண்ணனுக்கு தகவல் வந்தது. அவர் ஆய்வு செய்தபோது ரூ.4,500-க்கு கள்ள நோட்டு இருப்பது தெரியவந்தது. அவர் புகாரின்படி சிவகிரி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிவகிரி எஸ் பி எஸ் தெருவில் வசிக்கும் மூங்கில் வியாபாரி ராமு (50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு கள்ள நோட்டை வழங்கிய அந்தியூர் தாலுகா பர்கூர் மலையைச் சேர்ந்த சக்திவேல் (37) என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News