வன்மீகநாதர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு
சிறப்பு அபிஷேகம் -மகா தீபாராதனை;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயிலில், ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சீயாத்தமங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.