முதல்வரின் நிவாரண நிதி வழங்கிய அமைச்சர்
மதுரையில் ரயில் விபத்தில் பலியான நபரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கப்பட்டது.;
மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட காமராஜபுரம் திருவிக தெருவை சேர்ந்த பாண்டியன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் எதிர்பாராத விதமாக ரயில் விபத்தில் உயிரிழந்தார். இவரது ஏழ்மையான குடும்பத்தை கருத்தில் கொண்டு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து பாண்டியின் மனைவி வடிவேல் அவர்களிடம் இன்று (ஏப் .27) வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி நிவாரண நிதிக்கான காசோலையை வணங்கினார். உடன் தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் இருந்தனர்.