ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கு தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு செல்வோருக்கு தடுப்பூசி போடப்படும்;

Update: 2025-04-27 15:02 GMT
ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஹஜ் யாத்திரை செல்லும் 95 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது.  இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு மொத்தம் 1,75,025 பேர் செல்ல இருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் இருந்து 5,657 பேர் செல்ல உள்ளனர். குறிப்பாக, ஈரோடு மாவட்டத்திலிருந்து, இந்தாண்டு ஹஜ் புனித யாத்திரை, 95 இஸ்லாமியர்கள் செல்ல உள்ளனர். இவர்களுக்கு, தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயமாகும். அதன்படி, ஈரோடு அடுத்த திண்டலில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் இஸ்லாமியர்களுக்கு நேற்று போலியோ சொட்டு மருந்து, மூளை காய்ச்சலை தடுக்கும் தடுப்பூசி, இன்புளுயன்சா தடுப்பூசி  போடப்பட்டது. இதில் 65 வயதுக்கு மேற்பட்ட 7 பேருக்கு எஸ்ஐவி தடுப்பூசிகள் பிரத்தியோகமாக செலுத்தப்பட்டது. மேலும், புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனைகளும் செய்யப்பட்டது.

Similar News