கலைஞர் நூலகத்தை திறந்து வைத்த அமைச்சர்
மதுரை மேலூரில் கலைஞர் நினைவு நூலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.;
மதுரை வடக்கு மாவட்டம், மேலூர் சட்டமன்ற தொகுதியில் கலைஞர் நூலகம் இலவச படிப்பகத்தினை மேலூர் நகராட்சி 6வது வார்டு அண்ணாகாலணியில் நேற்று (ஏப். 27) வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் இன்பா ரகு, ஜி.பி. ராஜா, மாவட்ட அமைப்பாளார் இளங்கோ, மாவட்ட துணை அமைப்பாளர்கள் குமரேசன், அய்யப்பன், வெற்றிச் செல்வன், மருது ராஜா, பரவை அன்புச்செல்வன், வண்ணி முத்துப்பாண்டி, சுதர்சன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், நகராட்சி துணை தலைவர் இளஞ்செழியன், மற்றும் நகர் கழக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.