ஜெயங்கொண்டத்தில் நகையை அடகு வைத்து பணம் வாங்கி தருவதாக கூறி நகையை  ஏமாற்றிய பெண் கைது.

ஜெயங்கொண்டத்தில் நகையை அடகு வைத்து பணம் வாங்கி தருவதாக கூறி நகையை  ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்*;

Update: 2025-04-28 03:25 GMT
அரியலூர், ஏப்.28- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுத்தறிவு நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் இவரது மனைவி சரஸ்வதி. இவர் தனக்கு சொந்தமான 8 பவுன் நகையை கடந்த 2004ம் ஆண்டு இந்தியன் வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார் இந்நிலையில் இவரும் ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபுவின் மனைவி சூர்யாவும் குடும்ப நண்பர்கள் போல் பழகியுள்ளனனர். சரஸ்வதிக்கு பண தேவை இருப்பதை அறிந்து கொண்ட சூர்யா வட்டி இல்லாமல் பணம் வாங்கி தருவதாக சரஸ்வதியிடம் கூறியுள்ளார் இதனை நம்பிய சரஸ்வதி வங்கியில் அடமான வைத்திருந்த 8 பவுன் நகையை மீட்டு அதனுடன் ஏழு பவுன் நகையை சேர்த்து என மொத்தம் 15 பவுன் நகையை எனது பெயரில் அடமானம் வைத்து பணம் வாங்கித் தர சூர்யாவிடம் கூறியுள்ளார் இதனையடுத்து சூர்யா நகையை அடமானம் வைத்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொடுத்துள்ளார் இந்நிலையில்  கடந்த வருடம் நவம்பர் 8ஆம் தேதி அசலுடன் வட்டியை கட்டி நகையை மீட்க சென்ற போதுதான் சூர்யா தன்னை ஏமாற்றி நகையை விற்றது தெரியவந்தது இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News