அனுமதியின்றி தகட்டுகள் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி பறிமுதல்

குற்றச் செய்திகள்;

Update: 2025-04-28 03:43 GMT
சித்துப்பட்டி பகுதியில் அன்னவாசல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த டிப்பர் லாரியில் உரிய அனுமதியின்றி தகட்டுகள் ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், சித்துப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது-32) என்பவர் மீது வழக்கு செய்து விசாரணை.

Similar News