பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரை சேர்ந்தவர் ராமதாஸ்(55). இவரது மனைவி அந்தமானில் வசித்து வருகிறார். அவரை சொந்த ஊருக்கு வருமாறு பலமுறை ராம தாஸ் வற்புறுத்தினார். ஆனால், மனைவி மறுப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த ராமதாஸ் சம்பவத் தன்று விஷம் குடித்தார். அருகில் வசித்தவர்கள் அவரை மீட்டு சிங்கம்புனரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராமதாஸ் இறந்துவிட்டதாக தெரிவித் தனர்.