தாராபுரம் ராஜ வாய்க்காலை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்
தாராபுரம் ராஜ வாய்க்காலை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள் நீரோட்டம் தடைபடுவதால் விவசாய பணிகள் பாதிப்பு;
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறபழிச்சாலை பகுதியில் உள்ள அமராவதி ஆயகட்டு பழைய ஆயக்கட்டு ராஜா வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்துள்ளதால் நீரோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் பச்சை, பசேல் என்று நன்கு வளர்ந்து நீண்ட தூரத்திற்கு நீரை ஆக்கிரமித்த நிலையில்.காட்சியளிக்கிறது. இதனால் ராஜ வாய்க்கால் முழுவதும் சீரான நீரோட்டம் தடைபட்டு விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. ராஜ வாய்க்காலில் உள்ள.ஆகாயத்தாமரைகள் படர்ந்து ஆக்கிரமித்து உள்ளதன் காரணமாக இந்த இடத்தை தண்ணிர் ஒரே அளவில் சீராக வேகமாக கடந்து செல்வதில் மிகவும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.சிறுவர்கள், கோடை விடுமுறையில் உள்ள பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் வாய்க்காலில் மீன் பிடித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் தாராபுரம் ராஜ வாய்க்கால் நடுவில் ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.