ஈரோட்டில் திடீர் தீ பரபரப்பு
ஈரோடு சி .என்.சி கல்லூரி பின்புறம் முட்புதரில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு;
ஈரோடு சத்தி சாலையில் சிக்கய அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.இதன் பின்புறம் காலியாக உள்ள பகுதியில் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென அந்த காலி இடத்தில் உள்ள முட்புதரில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தி மூலம் பரவியப் புகையால் அந்த பகுதியை ஒட்டிய பொதுமக்கள் சுவாசிக்க சிரமப்பட்டனர். இதை அடுத்து அக்கம் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் ஊத்தி இணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். போலீஸ் விசாரணையில் மர்ம நபர்கள் முட்புதரில் தீ வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.